செவ்வாய், 28 ஜூன், 2011
ஜூன் 30ஆம் தேதி ஆரம்பமாகிறது மருத்துவ படிப்பிற்கான கவுன்சலிங்
வருகிற ஜூன் 30 ஆம் தேதி சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி அலுவலக வளாகத்தில் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கவுன்சுலிங் நடக்க இருக்கிறது. ஜூன் 30 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடக்க இருக்கும் இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக மாணவ,மாணவிகளுக்கு கவுன்சலிங் வருவதற்கான நேரமும், கட் ஆப் மார்க்கும் இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கவுன்சிலிங்கை குறித்து விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் கிடைக்காவிட்டால் மாணவ மாணவிகள் இணையதளத்தில் பார்த்து கவுசிளிங்கில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாணவ மாணவிகளுக்கு கவுன்சிலிங் குறித்து அறிவிக்கப்பட்ட 1 மணி நேரத்திற்கும் முன்னதாகவே வர வேண்டும் மற்றும் மாணவ மாணவிகளுடைய பிளஸ் 2 தேருவுக்கான மதிப்பெண் மாற்றம் இருந்தால் அதற்க்கான சரியான சான்றிதழுடன் வர வேண்டும்.
மேலும் பல்வேறு பிரிவினை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு தனி தனியாக கவுன்சிலிங் நடக்க இருக்கிறது. விளையாட்டு வீரர்கள்,மாற்றுத்திரனளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகளுக்கான கவுன்சிலின் வருகிற ஜூன் மாதம் 30 ஆம் தேதி நடக்க இருக்கிறது. பொது பிரிவினரான அதிக மதிப்பெண் எடுத்த அனைத்து சமுகத்தை சேர்ந்த மாணவ மானவிகளுக்குகான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 1 ஆம் தேதி நடக்க இருக்கிறது. பிற்ப்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 2 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கும் மற்றும் வருகிற ஜூலை மாதம் 4 ஆம் தேதி காலை 9 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கும் நடக்க இருக்கிறது. முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கான கவுன்சலிங் வருகிற ஜூலை மாதம் 4 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடக்க இருக்கிறது.மிக பிற்பட்டோருக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கும் பிற்பகல் 2 மணிக்கும் நடக்க இருக்கிறது. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 6 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடக்க இருக்கிறது. அருந்ததியினருக்கும் மற்றும் மலைவாழ் பலங்குடி மக்களுக்கான கவுன்சலிங் வருகிற ஜூலை மாதம் 6 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடக்க இருக்கிறது.முதல் கட்ட கவுன்சிலிங்போது வராத மாணவ மாணவிகளுக்கு 2 ஆம் கட்ட கவுன்சிலிங்க்கு வர அனுமதி இல்லை.

0 comments:
கருத்துரையிடுக