வெள்ளி, 24 ஜூன், 2011

நூதன முறையில் ரூ 45 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்

கடந்த சில நாட்களாக வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வந்தது. எனவே இந்த கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டிருன்தனர். இதனையொட்டி கடந்த சில தினைங்களுக்கு முன் திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த இரண்டு நபர் கையும் களவுமாய் சிக்கினர். சிக்கி கொண்ட இரண்டு நபரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் மேலும் நூதன முறையில் சில பேர் பெறும் வகையில் தங்கம் கடத்தி வர திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் துபாயிளுருந்து கொழும்பு வழியே சென்னை வர இருப்பதாகவும் தெரிவித்தனர். 
இதனையொட்டி தகவல் அறிந்த போலீசார் கடத்தல் கும்பலை கண்டறிய தனிப்படை போலீசார் அமைத்து 3 குழுவாக அமைத்து மாறுவேடத்தில் சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பதை அறிந்த கடத்தல் கும்பல் அவர்கள் துபாயிலிருந்து கொழும்பு வழியாக சென்னை வர இருந்த திட்டத்தை மாற்றி அமைத்து கொழும்பில் இறங்கி விமானம் மூலம் திருவனத்தபுரம் சென்று அங்கிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை புறப்பட்டனர்.கடத்தல் கும்பல் இவ்வாறு கொழும்பில் இருந்து திருவந்தபுரம் சென்றதும் அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வர இருப்பதையும் சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பில் இருந்த போலீஸாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்த போலீசார் ரயிலில் வரும் கடத்தல் கும்பல் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தான் வந்து சேர்வார்கள் என்று எண்ணி செங்கல்ப்பட்டு ரயில் நிலையத்தில் கண்காணித்து வந்தனர். போலீசார் ரயில் நிலையத்தில் கண்காணிப்பில் இருப்பதை அறிந்த கடத்தல் கும்பல் செங்கல்ப்பட்டு சேரும் முன்பே விழுப்புரம் ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டனர். விழுப்புரத்தில் இறங்கிய கடத்தல் கும்பல் அங்கிருந்து கார் வழியாக சென்னைக்கு புறப்பட்டனர். இதனையடுத்து சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமானம் நிலையம் அருகில் போலீசார் குழு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்த முயன்ற போது அந்த கார் நிற்காமல் கடந்து செல்வதை அறிந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து வழி மறித்து நிறுத்தினர். வழி மறித்து நிறுத்திய காரில் உள்ள நபர்கள் கொழும்பை சேர்ந்த 45 வயதுடைய பைசல் முகமது, 35 வயதுடைய முகமது பஸ்வன், 37 வயதுடைய முகமது அக்பர், 44 வயதுடைய பசில் முகமது இவர்கள் கொழும்பில் இருந்து சுற்றுல்லா விசா மூலம் திருவந்தபுரம் வந்தது தெரியவந்தது. போலீசார் விசாரித்த போது அவர்கள் ஏறுக்கு மாறாக பதில் அளிப்பதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சென்னையில் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வந்தார்கள். மேலும் அவர்கள் வைத்திருந்த சூட்கேசை சோதித்து பார்த்த போது அதில் கார்பன் காகிதத்தில் சுற்றி வைக்கப்பட்ட தங்க சங்கிலி,வளையல்கள் மற்றும் விமான நிலைய ஸ்கேனில் தெரியாமல் இருப்பதற்காக வெள்ளி முலாம் பூசப்பட்ட 1 கிலோ 860 கிராம் எடை கொண்ட 10 தங்க கட்டிகள் இருந்தன. இதனுடைய மதிப்பு ரூ 45 லட்சம் இருக்கும்.இவை அனைத்தையும் போலீசார்கள் பறிமுதல் செய்தனர்.மேலும் 4 பேரை கைது செய்த போலீசார் இதன் பின்னியில் யார் இருக்கிறார்கள் என்பதை பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். 

0 comments:

கருத்துரையிடுக