சனி, 18 ஜூன், 2011

கடைகளில் பயன்படுத்திய 47 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல்

குமரி மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக்கை பை ஒழிக்க கடும் நடவடிக்ககை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த 1-4-2010 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 4 நகராட்சி, 56 பேரூராட்சி, 99 கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் பிளாஸ்டிக் தடை நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு தலைதூக்க தொடங்கியது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக்கை ஒழிக்க கலெக்டர் ஆஷிஷ் குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 65 கடைகளில் இருந்து 47 கிலோ பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ.12 ஆயிரத்து 650 அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கலெக்டர் கூறுகையில்,
குமரி மாவட்டத்தில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க பொது மக்கள், வணிக நிறுவனங்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் அடியோடு ஒழிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக