வியாழன், 30 ஜூன், 2011

சென்னையில் குழந்தையை கடத்திய 4 பேர் கைது

சென்னையில் உள்ள சைதாபேட்டை பகுதியை சேர்ந்த முரஹரி சாலையில் உள்ளவர் முருகன் இவரது மனைவி செந்தமிழ் செல்வி இவர்களுக்கு 3 வயதில் அஸ்வினி என்ற மகளும், 11/2 வயதில் மணி ராஜ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 16 ஆம் தேதி வீட்டின் வாசலில் விளையாடி கொண்டிருக்கும் போது மணிராஜ் என்ற 11/2 வயதுடைய மகனை காணவில்லை.இதைக்குறித்து முருகன் சைதாபேட்டை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். முருகனின் புகாரின் அடிப்படையில் தனி படை போலீசார் அமைத்து குழந்தை மணி ராஜை தேடிவந்தனர்.இந்நிலையில் குழந்தை மணி ராஜ் பேரூர் மந்தவெளி பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற ஆட்டோ ஓடினர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. 
உடனே தனி படை போலீசார் விரைந்து சென்று சத்தியமூர்த்தி வீட்டில் இருந்த குழந்தை மணி ராஜை மீட்டனர். பின்பு சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தினர்.தனி படை போலீசார் நடத்திய இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. ஈரோட்டை சேர்ந்த சிவசலாபதி சாந்தி தம்பதியினர்.இவர்களுக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை . பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத இந்த தம்பதியினர். 1 வயதிலிருந்து 2 வயதுவரை உள்ள ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுக்க விருப்பப்பட்டு சென்னையில் உள்ள பல ஆனதை விடுதிகளில் தங்கள் பெயரை பதிவு செய்தனர். 

இந்நிலையில் குழந்தை தத்தேடுப்புகாக அசோக் நகரில் உள்ள லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ்டஐ அணுகினார் ஆனால் அங்கு குழந்தை இல்லை .மேலும் அந்த டிரஸ்ட்ல் வேலை பார்த்து வரும் ரோஸ்மேரி என்பவர் ராஜஸ்த்தான் டிரஸ்ட் வேலை பார்த்து வரும் இந்திரா என்பவரை சிவசலாபதிக்கு அறிமுகம் செய்துள்ளார் . சிவசலாபதியும் இந்திராவும் இடையே பழக்கம் ஏற்ப்பட்டது. சிவசலாபதி ஒரு நாள் இந்திராவிடம் உடனடியாக குழந்தை வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இவரது வற்புறுத்தலை புரிந்த இந்திரா உடனடியாக குழந்தை தத்தெடுக்க சட்ட ரீதியான தேவைகளை பூர்த்தி செய வேண்டும் என்றும் அதற்க்கு சற்று காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் உடனடியாக வேண்டும் என்றால் குழந்தையை கடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

குழந்தை கடத்தலுக்கும் சம்மதம் தெரிவித்த சிவசலாபதி அதற்காக 3 லட்சம் வரை கேட்ட இந்திராவுக்கு 2 1/2 லட்சம் பேரம் பேசி முடிவுசெய்தார்.பலதடவை டிரஸ்ட் மூலம் ஆட்டோ வாங்க வங்கியில் கடன் வாங்கி கொடுடுத்த சத்தியமூர்த்தி என்பவரை இந்திரா குழந்தை கடத்துவதற்காக அணுகினார்.மேலும் இந்திரா வேலை பார்த்து வரும் டிரஸ்ட் மூலம் உதவி பெற்ற நாகமால் என்பவர் அவரது கணவர் நாராயணன்,அவரது மகன் வெங்கடேஷ் மற்றும் இந்திரா தோழியான கலா,சுமதி,இலக்கியாஆகியோர் சேர்ந்து திட்டமிட்டனர்.இதில் இந்திரா தோழியான சுமதி வசிக்கும் அடுத்த தெருவில் தான் குழந்தை மணி ராஜ் இருப்பது சுமதி மூலம் தெரிந்துள்ளார்கள்.

மேலும் குழந்தையை கடத்துவதர்க்காக சிவசலாபதியிடம் முன்பணமாக ரூபாய் 60 ஆயிரம் பெற்றுள்ளார்கள் .எனவே திட்டமிட்டபடி கடந்த 16 ஆம் தேதி அன்று வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த மணி ராஜை கடத்தினர். குழந்தையை கடத்திய பின்பு சிவசலாபதியிட காமித்தனர் சிவசலாபதி இந்திராவிடம் குழந்தையை வைத்திருக்க சொல்லி தான் ஈரோடு போயிட்டு வருவதாக கூறி சென்றுவிட்டார்.தன்னிடம் குழந்தையை வைத்திருக்க பிடிக்காத இந்திரா ஆட்டோ ஓடினரான சத்தியமூர்த்யிடம் பார்த்துக்க சொல்லி அதற்காக ரூபாய் 10 ஆயிரம் கொடுத்துள்ளார். குழந்தை அணிவித்த நகைகளும் நாகாமால் வைத்திருந்தார். அதையும் தனி படை போலீசார் மீட்டு குழந்தையையும்,நகையையும் பெற்ரோர்களிடம் ஒப்படைத்து விட்டனர்.மேலும் இந்த கடத்துளுக்காக பயன்படுத்தின ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இந்த கடத்தல் சம்ம்பவதில் ஈடுப்பட்ட இந்திரா,நாகம்மாள்,சுமதி மற்றும் ஆட்டோ ஒடினரான சத்தியமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மேலும் இந்த கடத்தலை குறித்து தனிப்படை போலீசார் கூறுகையில் குழந்தையை காணவில்லை என்று புகார் அளித்ததும் குழந்தை மணி ராஜை குறித்தி அங்கு அங்கு நோட்டிஸ் ஒட்டப்பட்டது.அந்த நோட்டிசை பார்த்த ஒருவர் அதில் உள்ள என்னை தொடர்பு கொண்டும் குழந்தை மணி ராஜ் ஆட்டோ ஓடினர் சத்தியமூர்த்தி வீட்டில் இருப்பதாக தெரிவித்தார் என்றும் மேலும் இந்த கடத்தல் பின்னணியில் யார் யார் இருகிறார்கள் என விசாரணை விசாரித்து வருகிறோம் என்றும் தெரிவித்தனர்.

0 comments:

கருத்துரையிடுக