வியாழன், 30 ஜூன், 2011

ஹஜ் மற்றும் உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை

இஸ்லாமிய மதத்தில் 5 கடமைகளில் ஒன்றான 5 வது கடமை ஹஜ். ஒவ்வரு இஸ்லாமியர்களும் ஹஜ்குரிய நாட்களில் மக்கா, மதினா சென்று ஹஜ் யாத்திரைகளை முடித்து விட்டு வருவது தான் ஹஜ் எனப்படும். மேலும் மற்ற நாட்களில் மக்கா,மதினா செல்வது உம்ரா எனப்படும். இந்த ஹஜ் மற்றும் உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை விதிக்க சவுதி அரசுக்கு மனு ஒன்றை புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கொடுத்துள்ளது. 

இவர்கள் கொடுத்த மனுவில் குறிப்பிட்டதாவது அஹமதியாக்கள்(காதியானிகள்) என்பவர் இஸ்லாத்தை மறுப்பவர்கள் மக்காவிற்கு வந்து உண்மையாக இருக்கும் இஸ்லாமியர்களை வழிகெடுகின்றனர் என்றும், மேலும் அஹமதியர்கள் மிர்சா குலாம் அஹமத் என்பவரையே பின்பற்றுபவர்கள் என்றும், உண்மையான் இஸ்லாமியர்கள் இறுதி தூதரான முகமது நபி(ஸல்) அவர்களையே பின்பற்றுபவர்கள் என்றும்,ஆனால் காதியானிகள் முகமது(ஸல்) அவர்கள் பின் மிர்சா குலாம் அஹமத் வருவார் என்று நண்பிக்கைகொண்டவர்கள் என்றும்,கடந்த 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய நாடுகளின் கூட்டுமைப்பில் அஹமதியர்கள் முஸ்லிம்கள் அல்லர் என்று தீர்மானம் அளிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் போன்ற பல நாடுகள் அஹமதியர்களை முஸ்லிம் இல்லை என்று அறிவித்துள்ளதாகவும் மேலும் அவர்களை மக்கா மற்றும் மதீனாவுக்கு செல்வதற்கும் ஹஜ் மற்றும் உம்ராவிற்கு செல்ல சவுதி அரசு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டது. அப்படி போக விருப்ப படுபவர்கள் முகமது நபி(ஸல்) அவர்களையே இறுதி நபியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கையொப்பம் இட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

0 comments:

கருத்துரையிடுக