செவ்வாய், 28 ஜூன், 2011

தற்போது புழக்கத்தில் உள்ள 50 பைசா நாணயம் செல்லும்

பணவீக்கம் மற்றும் விலைவாசி காரணமாக 25 மற்றும் 50 பைசா நாணயங்களை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது என்றும் வருகிற 29 ஆம் தேதி முதல் 25 பைசா மற்றும் 50 பைசா செல்லாது என்று ஏற்க்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் கடைக்காரர்கள் 25 பைசா மற்றும் 50 பைசாவை வாங்க மறுகிரார்கள் என பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். இதைக்குறித்து ரிசர்வ் வங்கி பொது மேலாளர் ஜெய பிரகாஷ் அறிவித்தாவது காசு புழக்கம் அதிகமாக தேவைப் படுவதால் தற்போது புழக்கத்தில் உள்ள 50 பைசா செல்லும் அதனை வாங்க மறுப்பதோ செல்லாது என கூறுவதோ சட்ட படி குற்றம் என அறிவித்துள்ளார். 
மேலும் 25 பைசா மட்டும் தான் வருகிற 29 ஆம் தேதிக்கு மேல் செல்லாது என்று அதை வைத்திருப்பவர்கள் வருகிற 29 தேதிக்குள் ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக