வியாழன், 9 ஜூன், 2011

பிரபல ஓவியர் எம்.எப் ஹுசேன் மரணம்

எம்.எப் .ஹுசேன் 95 வயதான இவர் மிக பிரபல ஓவியர் ஆவர். இவருடை மார்டன் ஓவியங்கள் உலக அளவில் 1 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டன. இவர் வரைந்த கிறிஸ்டி பற்றிய ஓவியம் மட்டும் 2 மில்லியன் டாலருக்கு விலை போனது. இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்பட்ட இந்த ஹுசேன் கடந்த 1915 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலம் பதான் பூரில் பிறந்தார். இந்தியாவின் உயரிய சிவில் விருதுகள் பத்மபூஷன் விருதுகள் பெற்ற இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு ராஜ்ய சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் இந்திய குடியுரிமை பெற்ற இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு சர்ச்சையில் இந்தியா விட்டு வெளியேற்றப்பட்டு கத்தார் நாட்டின் குடியுரிமை பெற்று லண்டனில் வசித்து வந்தார். அவர் இந்திய நாட்டை விட்டு வெளியேறினாலும் நாட்டின் மீது அதீத பற்று கொண்டவர் என்றும் இந்தியாவில் தன்னால் தொடர்ந்து வாழ முடியவில்லை என்பது அவருடைய கவலை என்றும் தெரிவித்துள்ளார். இநிலையில் இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டன் பிராம்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் இன்று காலை மாரடைப்பால் காலமானார். 
காலமானா எம்.எப். ஹுசேன் இந்தியாவில் மிக அதிக ஊதியம் பெற்றவர் என்றும் கடேசிவரை இவர் திருமணம் செய்யவில்லை என்றும் குறிபிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக