வியாழன், 9 ஜூன், 2011
ஸ்பெயினை கலக்கிய கூட்டணி சூட்கேசுக்குள் மறைந்து சுருட்டிய பலே திருடன்.
தினுசு தினுசா திருடுறாங்களய்யா... ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? என்ற டயலாக் சிரிப்பதற்குமட்டுமல்ல, சிந்திக்கவும்தான் என்று காட்டி விட்டனர் ஸ்பெயின் திருடர்கள் இருவர். சூட்கேசுக்குள்மறைந்திருந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிய அந்த ஜோடியை ஒருவழியாக போலீஸ் கைதுசெய்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் கிரோனா விமான நிலையத்தில் இருந்து பார்சிலோனா நகருக்கு விமான பயணிகளின்உடமைகள் பஸ்சில் கொண்டு வரப்படுவது வழக்கம். அதே பஸ்சில் டிக்கெட் வாங்கி தனது சூட்கேசை அடிக்கடிஏற்றுவார் ஒருவர். பார்சிலோனாவில் அதை பெற்றுக் கொள்வார். அவர் பலே திருடர். சூட்கேசுக்குள் இருந்ததுஅவரது கூட்டாளி திருடர். விமான பயணிகளின் உடமைகள் நிறைந்த பஸ் புறப்பட்டதும், சூட்கேசில்மறைந்திருப்பவர் வெளியே தலையை நீட்டுவார். விமான நிலையம் - பார்சிலோனா இடையே ஒன்றரை மணிநேர பஸ் பயணம்.
சிறிய கத்தி, சாவிகள் மூலம் பயணிகளின் சூட்கேஸ்கள், பைகளை திறந்து விலை உயர்ந்த நகைகள்,பொருட்களை லவட்டுவார். பார்சிலோனாவை பஸ் அடைவதற்குள் மீண்டும் சூட்கேசுக்குள் அடைபட்டுவிடுவார். பார்சிலோனாவில் தனது சூட்கேசை கூட்டாளி திருடர் பத்திரமாக பெற்றுச் சென்று விடுவார்.
இப்படி தொடர்ந்த திருட்டால், போலீசுக்கு ஏகப்பட்ட புகார்கள். ஆனால், பஸ்சில் வேறு பயணிகள் யாரும்கிடையாது என்பதால் டிரைவரை மட்டும் சோதனையிட்டு விட்டு குழம்பி தவித்தது போலீஸ். புகார்கள்தொடர்ந்ததால், வேறு வழியின்றி பஸ்சை நடுவழியில் மறித்து ஏறினார் ஒரு போலீஸ் அதிகாரி.
அப்போது ஒரு சூட்கேசில் அசைவு தெரிந்ததும் பொறி தட்டியது அவருக்கு. அதை திறந்து பார்த்து அதிர்ந்தார்.உடலை வளைத்து நெளித்து அடைபட்டு கிடந்த திருடனை வெளியே இழுத்து போட்டார். அவர் குட்டுவெளிப்பட்டதால், பார்சிலோவை அடைந்ததும் கூட்டாளியையும் அமுக்கியது போலீஸ்.

0 comments:
கருத்துரையிடுக