வெள்ளி, 10 ஜூன், 2011
பூமியை நோக்கி வருகிறது சூரிய தீ பிழம்பு
பூமியை நோக்கி வருகிற சூரிய தீ பிழம்பு பற்றி பேராசிரியர் பிரயன் கொக்ஸ் தெரிவித்தது என்னவென்றால் சூரியன் மேற்பரப்பில் இருந்து கசக்கப்பட்ட பாரிய தீபிளம்பு ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருகிறதாகவும் . இந்த பாரிய தீ பிழம்பு மணிக்கு 31 லட்சம் மைல் வேகத்தில் பூமியை நோக்கி வருவதாகவும்,இந்த தீபிளம்பு பயங்கர சத்தத்துடன் கடந்த திங்கட்கிழமை முதல் பூமியை நோக்கி வந்து கொண்டிருகிரதாகவும்,இந்த தீ பிழம்பு நேரடியாக பூமியை நோக்கி அமையவில்லை என்றும்,இதை பற்றி யாரும் அச்சம்கொள்ள தேவை இல்லை என்றும், சூரியன் என்பது பூமியின் அளவை போன்ற ஒரு மில்லியன் மடங்கு பெரியது என்றும், அங்கும் இங்கு உள்ளது போல் மோசமான காலநிலை உண்டாகும்.
கடந்த திங்கட்கிழமை அங்கு சூரியனின் காலநிலை மிகவும் மோசமடைந்ததால் சூரியனில் இருந்து பாரிய தீ சுவாலை வெளிபட்டுள்ளதாகவும், மிகவும் சூடேறிய பில்லியன் கணக்கான துணிக்கைகள் ஒன்று சேர்ந்து பாரிய சுவாளையாக வெளியேறியதாகவும் இதனை சூரியன் கிளர்ச்சி என்று வர்ணிக்கலாம் என்றும், கடந்த 1859 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி இதே போல் சூரிய பிழம்பு ஒன்று வெளிப்பட்டதாகவும் அதனை கெரிங்டன் பிழம்பு என்று அழைத்தார்கள் என்றும், கெரிங்க்டன் பிழம்போடு இந்த தீ பிழம்பை ஒப்பிடுகையில் இது சிறியது என்றும், இது போல் தீ பிழம்பு 500 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் பேராசிரியர் பிரயன் கொக்ஸ் தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக