வெள்ளி, 10 ஜூன், 2011

அமெரிக்க தாக்குதலில் பலியானதாக கூறப்பட்ட அல்கொய்தா தலைவர் ஜவாஹிரி வீடியோவில் தோன்றினார்; அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார்

பாகிஸ்தானில் ரகசிய பங்களாவில் மறைந்திருந்த அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு கூட தெரியாமல் அமெரிக்க படைகள் தீர்த்துக்கட்டின. இதையடுத்து அமெரிக்காவையும், பாகிஸ்தான் ராணுவத்தையும் பழி தீர்ப்போம் என, அல்-கொய்தா அமைப்பின் 2-வது கட்ட தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அல்- கொய்தா அமைப்புக்கு புதிய தலைவராக ஜவாஹிரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகின. பின்லேடனின் நம்பிக்கைக்கு உரியவர் மற்றும் மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுபவர் தான் ஜவாஹிரி. பின்லேடன் கொல்லப்படும் வரை, இவர் கூடவே இருந்து வந்துள்ளார். எகிப்து நாட்டைச் சேர்ந்த இவர் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்க படையின் தாக்குதலில் பலியானதாக கூறப்பட்டது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில் ஜவாஹிரி தோன்றும் வீடியோ காட்சி நேற்று வெளியானது. அல்-கொய்தா ஆதரவு தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது. வீடியோ காட்சியில் பேசும் ஜவாஹிரி, பின்லேடனை வானலவில் புகழ்ந்தார். பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்கு வோம். அதற்கான விளைவை விரைவில் அமெரிக்கா சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்தார். அல்-கொய்தா அமைப்பின் புதிய தலைவராக ஜவாஹிரி முறைப்படி தேர்ந்து எடுக்கப்படவில்லை.

அதற்கான சடங்குகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பின்லேடன் கொல்லப்பட்ட உடனேயே, அல்- கொய்தா அமைப்பின் அடுத்த தலைவராக மற்றொரு எகிப்தியரான சாய்ப் அல்-ஆதல் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கடந்த மாதம் தகவல் வெளியானது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் அப்போதும் அதை மறுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக