ஞாயிறு, 12 ஜூன், 2011
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பழச்சாறு
இங்கலாந்தில் வடக்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பாங்கர் பல்கலைகழகம் ஒன்று மனிதர்கள் பழங்களை சாப்பிடுவதால் ஏற்ப்படும் நன்மைகள் தீமைகள் குறித்து ஆயுவு மேற்கொண்டனர். அவர்கள் நடத்திய இந்த ஆய்வில் பழச்சாறு சாபிடுபவர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது அதாவது அதிகமாக பழச்சாறு சாப்பிடுபவர்களுக்கு உடலில் உள்ள இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது, பற்களுக்கும் கேடு விளைவிகிறது மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட தூண்டுகிறதாம். இதனால் உடல் பருமன் அதிகரித்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதாவது பழச்சாறு சாப்பிடுபவர்கள் 1 டம்பளர் பழச்சாறில் 5 ஸ்பூன் சர்க்கரையின் அளவு இருக்கிறது என்றும் இப்படிப்பட்ட சர்க்கரை நிரந்த பழச்சாறை சாபிடுவது உடல் நலத்திர்ர்க்கு கேடு விளைவிக்கும் என்றும் அதே 1 டம்பளர் பழச்சாற்றில் 4 மடங்கு தண்ணீர் சேர்த்து சாப்பிட்டால் அதனுடைய பாதிப்புகள் குறையும் என்றும் பழச்சாறு சாபிடுவத்ர்க்கு பதில் பழங்கள் சாபிடுவது உடல்நலத்திற்கு நல்லது என்று இங்கலாந்தில் வடக்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பாங்கர் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் தெரியவருகிறது.

0 comments:
கருத்துரையிடுக