ஞாயிறு, 12 ஜூன், 2011
பாஸ்போர்ட், விசா மற்றும் போக்குவரத்து அபராத கட்டணங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்.
வரி வருவாய் குறைவை ஈடுகட்ட பாஸ்போர்ட், விசா மற்றும் போக்குவரத்து அபராத கட்டணங்களை உயர்த்த மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. பணவீக்கம் அதிகரிப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் உள்ள நிலையில், வரி வருவாய்தான் அரசின் முக்கியவருமானமாக உள்ளது. எனினும், இந்த வருவாய் அரசின் செலவினங்களை ஈடுகட்ட போதுமானதாக இல்லை. அதற்காக வரிகளை உயர்த்தினால் விலைவாசிமேலும் அதிகரிக்கும். எனவே, இதை ஈடுகட்ட வரிகள் அல்லாத வருவாயை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உதாரணமாக,போஸ்ட் கார்டுகள், பாஸ்போர்ட், விசா, போன்ற சேவைகளை அரசு வழங்குகிறது. இதற்காக வசூலிக்கும் கட்டணங்களே அரசுக்கு வரிஇல்லாத வருவாய். இந்த சேவைகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் மிகவும் குறைவு. தபால் கார்டுக்கான தயாரிப்பு செலவு மற்றும்பாஸ்போர்ட், விசா தயாரிப்பு, அவற்றுக்கு விண்ணப்பிக்கும் நபர்களை சரிபார்த்தல், தகுதியான நபர்தானா என்று பரிசீலித்தல்போன்றவற்றுக்கு அரசு செலவிடுகிறது. ஆனால், அந்த செலவுகளை ஈடுகட்டும் அளவு கூட கட்டணமாக வசூலிக்கப்படுவதில்லை.
தபால் கார்டு தயாரிப்புக்கான செலவு, அவற்றை கொண்டு செல்லும் செலவோடு ஒப்பிடும்போது தபால் கார்டுகளால் அரசுக்கு நஷ்டமேஏற்படுகிறது. மேலும், பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணம், நினைவு சின்னங்கள், வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்ப்பதற்காக மிகவும் குறைவான கட்டணங்களே வசூலிக்கப்படுகின்றன. போக்குவரத்து விதிகளைமீறுவோருக்கான அபராத கட்டணமும் குறைவாக உள்ளது.
இதுபோன்ற வரி இல்லாத வருவாய் கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் வருவாயை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பல்வேறு துறைகளின் சார்பில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவது பற்றி பரிசீலிக்குமாறு அரசு துறைகளைமத்திய நிதித்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, பாஸ்போர்ட், விசா கட்டணங்கள், போஸ்ட் கார்டு விலை விரைவில்உயரும் என்று தெரிகிறது.

0 comments:
கருத்துரையிடுக