செவ்வாய், 21 ஜூன், 2011

இன்று சேலம்,கிரிஷ்ணகிரி மற்றும் நாமக்கல் பகுதிகளில் நிலநடுக்கம்

இன்று அதிகாலையில் சரியாக 5 :20 ௦ மணியளவில் சேலம்,கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் பகுதிகளில் திடிரென லேசான நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2 .9 ஆக பதிவாகியுள்ளது. இந்த லேசான நிலநடுக்கத்தின் போது வீட்டில் உள்ள பாத்திரங்கள் உருண்டு கட்டிடங்களும் அதிர்ந்ததால் தூங்கி கொண்டிருந்த மக்கள்கள் பயந்து வீட்டை விட்டு வெளியேறினர். இதேப்போல் சேலம் மாவட்டம் அருகில் உள்ள ஆத்தூர், ஏத்தாபூர் ,உமையாள் புறம், கொட்டவாடி,பேலூர் கரடிப்பட்டி,கல்லேரிப்பட்டி உளிட்ட 20 கிராமங்களிலும் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பீதி அடைந்து தெருக்களில் கூட்டம் கூட்டமாக கூடினர். இந்த நில அதிர்வால் வீடுகள் மேலே மேயப்பட்டிருந்த ஓடுகள் கீழே விளுந்ததாக் கூறப்படுகிறது. 
இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பேறும் சப்தத்துடன் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதாகவும் அங்கும் தூங்கி கொண்டிருந்த மக்கள்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் கூடினதாகவும் கூறப்படுகிறது .மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் இன்று காலை 8 :35 மணியளவில் மக்கள்கள் நிலத் தடியில் கடா முடா என்று சப்த்தம் கேட்டதாகவும் அதனை தொடர்ந்து நில அதிர்வு ஏற்ப்பட்டதாகவும் ஊத்தங்கரை மக்கள் கூறிகின்றன.மேலும் காலை 8 :45 க்கு மீண்டும் நில அதிர்வு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக