சனி, 25 ஜூன், 2011
சனி கிரகத்தில் உப்பு தண்ணீர் ஏறி
ஜெர்மனியை சேர்ந்த ஹெய் டெல் பேர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த வானவியல் விஞ்ஞானி ஆன பிராங் போஸ்ட் பேர்க் தலைமையிலான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் என்செலாடஸ் என்ற சந்திரனில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு வெண்நீர் ஊற்றுகளும், ஐஸ் கட்டிகளும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தன. மேலும் என்செலாடஸ் சந்திரனில் ஐஸ்கட்டிகள் இருப்பதை நாசா விண்வெளி மையத்தின் காசினி வின்க்கலம் போட்டோ எடுத்து அனுப்பியது.அந்த ஊற்றுகள் எங்கிருந்து வருகின்றது என வானவியல் விஞ்ஞானியான பிராங் போஸ்ட் பேர்க் தலைமையிலான இந்த ஆய்வில் மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில் இந்த வெந்நீர் ஊற்றுகளும் ,ஐஸ்கட்டிகளும் அங்குள்ள ஏரில் இருந்து உற்பத்தியாகி வருகிறது என கண்டுபிடித்துள்ளனர். மேலும் அங்கு உள்ள ஐஸ்கட்டிகளில் அதிக அளவு உப்பு படிவங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த ஊற்றுகளை பற்றி தெரிவித்துள்ளது என்னவென்றால் என்செலாடஸ் சந்திரனில் உப்பு நீர் ஏறி இருப்பதாகவும், இந்த உப்பு படிவங்களில் 30% என்செலாடஸ் சந்திரனின் நீறுற்றுகளில் இருப்பதாகவும்,நீறுற்றுகள் இரண்டு ஏரிகளில் இருந்து வருவதாகவும், அதில் ஒன்று என்செலாடஸ் மேற்ப்பரப்பில் அருகே மிகவும் பெரியதாகவும் ஆழமாகவும் இருக்க கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:
கருத்துரையிடுக