சனி, 25 ஜூன், 2011
தூத்துக்குடி காகித குடோனில் தீ விபத்து
தூத்துக்குடியில் உள்ள மார்கெட் பகுதியில் எசக்கி என்பவருக்கு சொந்தமான பழைய காகித குடோன் ஒன்று உள்ளது. அந்த குடோனில் இன்று அதிகாலை சுமார் 5 :30 மணியளவில் திடிரென தீபிடித்தது. காகிதத்தில் தீ பிடித்ததால் மளமள வென அங்கு உள்ள எல்லா காகித மூட்டைகளிலும் தீ பரவியது. குடோனில் உள்ள எல்லா மூட்டைகளும் கடுமையாக எரிந்தததால் அந்த பகுதியில் உள்ள பல கட்டிடங்களையும் தாண்டி தீ பிடித்து எரிந்தது பெரிதாக காட்ச்சியளிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இந்த விபத்தை குறித்து உடனடியாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கபட்டது.
தகவல் அறிந்த தீ அணைப்பு படையினர் வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு காலை முதல் தீயை அணைக்க போராடி வருகின்றன. இந்த தீ விபத்தில் ரூ 1 கோடி அளவிற்கு சேதம் அடைந்ததாக குடோனின் உரிமையாளர் எசக்கி தெரிவித்தார். மேலும் இந்த காகித குடோன் தீ விபத்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

0 comments:
கருத்துரையிடுக