சனி, 4 ஜூன், 2011
இ மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் பற்றிய ஓர் எச்சரிக்கை!
சென்னையை போலிஸ் கமிஷனர் திரிபாரதி இ மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் பற்றிய ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளார் . அவர் கூறியதாவது பொது மக்களின் தெரியாத எனிலிருந்தோ அல்லது தெரியாத மின் அஞ்சல் முகவரியிளிருந்தோ உங்கள் செல்போன்களுக்கு அல்லது உங்கள் இ மெயில்களுக்கு உங்கள் என் அல்லது உங்கள் இ மெயில் கோடி ரூபாய் அல்லது பவுண்டு அல்லது டாலர்கள் வென்றுள்ளது என்றும் அதை பெற்று கொள்ள அவர்கள் ஏதாவது ஒரு தொலைபேசி என் அல்லது ஒரு மின் அஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் என உங்கள் தொலைபேசிக்கோ அல்லது உங்கள் இ மெயிளுகோ அடிக்கடி தகவல் வரும். அதை நீங்கள் உண்மை என நம்பி தொடர்பு கொண்டால் உங்களுக்கான பரிசு தொகையை முறையாக பெற்று கொள்ள அதாவது பேங் கிளியரன்ஸ் கமிஷன், சேவை வரி இவைகளை சரி செய்வதற்காக உங்களை இரண்டு லட்ச்சமோ அல்லது மூன்று லட்ச்சமோ குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்த சொல்வார்கள்.
அவர்கள் சொன்ன மாதிரி நீங்கள் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்திய உடன் மீண்டும் கொஞ்சம் பணம் செலுத்த சொல்வார்கள். இப்படியே மீண்டும் மீண்டும் பண செலுத்த சொல்லி உங்கள் இ மெயிளுகோ இல்லை தொலைபேசிக்கோ தகவல் வரும். கடைசியாக நாம் ஏமாந்து விட்டோமோ என்று என்னும் பொது அவர்களது தொடர்பு நிற்று விடும். இவ்வாறு யாரோ ஒருவர் கலந்து கொள்ளாத லாற்றிகளிலோ அல்லது வினப்பிக்காத போட்டிகளிலோ உங்களுக்கு பரிசு கிடைத்திருப்பதாக தகவல் அனுப்பினால் அதை நம்ப வேண்டாம். இது மட்டும்மின்றி தங்கள் வங்கி கணக்கில் உள்ள ரகசிய குறியீட்டு என்னையோ அல்லது உங்கள் வங்கி விபரங்களை கேட்டோ தகவல் வந்தால் அதை புறகணிக்க வேண்டும். உங்கள் வங்கி கணக்கை பற்றியோ அல்லது வங்கின் குறியீட்டு என்களை பற்றியோ உங்கள் வங்கிகள் இ மெயில் மூலம்மாக தொடர்பு கொள்ள அவசியம் இல்லை. இப்படி வரும் இ மெயில்களை நம்பி உங்கள் வங்கியின் விவரங்களை நீங்கள் அனுப்பினால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் அத்தனை பணமுமு சுருட்டப்படும். எனவே மக்கள்கள் இதுபோன்ற விஷயத்தில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என போலிஸ் கமிஷனர் திரிபாரதி தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக