திங்கள், 27 ஜூன், 2011
பாகிஸ்தான் போலீஸ் நிலையத்தில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட கணவன்- மனைவி
பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு பாகிஸ்தானில் தற்போது தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தேரா இஸ் மாயில்கான் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று தலிபான் தீவிரவாதகிள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பின்னர் தற்கொலை தாக்குதலிலும் ஈடுபட்டனர். அதில் 12 போலீ சார் உயிரிழந்தனர். இந்த தற்கொலை தாக்கு தலில் தலிபான் தீவிரவாதி யும், அவரது மனைவியும் ஈடுபட்டது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் தலிபான்களின் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷான் தெரிவித்தார்.
ஒரு செய்தி நிறுவனத்துக்கு டெலிபோனில் இதை அவர் தெரிவித்தார். பின்லேடன் சுட்டு கொல்லப்பட்டதற்கு பழிவாங்க இந்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். இதுவரை நடந்த தற்கொலை தாக்குதல்களில் பெண்களை தலிபான்கள் பயன்படுத்தியது இல்லை.
தற்போது தான் முதன் முறையாக ஒரு பெண் பயன் படுத்தப்பட்டு இருக்கிறார். இதற்கிடையில் முல்தான் நகரில் உள்ள மற்றொரு போலீஸ் நிலையம் மீது நேற்று தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அதில் 4 போலீசார் காயம் அடைந்தனர்.

0 comments:
கருத்துரையிடுக