திங்கள், 27 ஜூன், 2011

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக முகமது ஜான் பதவியேற்பு

பிற்படுத்தப்பட்டோர் மற்றும சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான் பதவியேற்கிறார். வரும் புதன்கிழமை சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார். மரியம்பிச்சை காலமானதால் சிறுபான்மை இனத்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா தனது அமைச்சரவையில் சில இலாகா மாற்றம் செய்துள்ளார்
மு.சி.சம்பத் வசம் இருந்த ஊரக வளர்ச்சித்துறை சி.சணமுகவேலுவுக்குத் தரப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணி வகித்து வந்த திட்ட அமலாக்கம் சம்பத்திடம் தரப்பட்டுள்ளது.

சண்முகவேலுவிடம் இருந்த தொழில்துறை எஸ்.பி.வேலுமணிக்கு தரப்பட்டுள்ளது.

கால்நடை மற்றும் பால்வளத்துறை கருப்பசாமியிடமிருந்து என்.ஆர்.சிவபதிக்கும், சிவபதியிடமிருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை கருப்பசாமிக்கும் தரப்பட்டுள்ளது.

டி.எம்.சின்னையா சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சராக நீடிப்பார். மரியம் பிச்சை வகித்து வந்த துறைகளை இவர்தான் இத்தனை நாட்களாக கூடுதல் பொறுப்பாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக