புதன், 22 ஜூன், 2011

புதிய தலைமை செயலக கட்டுமான பணி: நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவு

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. புதிய தலைமை செயலக பணிகள் நிறைவடையாததால் சென்னை கோட்டையிலேயே தற்போது தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது.  கடந்த 3-ந் தேதி சட்டப்பேரவையில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா உரையாற்றும்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், ``புதிய தலைமை செயலக கட்டிடப்பணிகளுக்கு கூடுதலான மற்றும் பயனற்ற செலவு, காலதாமதம், தரமற்ற கட்டுமானப் பணிகள் போன்ற குறைபாடுகள் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த விசாரணை முறையாக நடைபெற ஏதுவாக புதிய தலைமை செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்'' என்று அறிவித்தார். 
அதன்படி, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.தங்கராஜ் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. 3 மாதத்தில் இந்த கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யும்

0 comments:

கருத்துரையிடுக