வெள்ளி, 1 ஜூலை, 2011

சீனாவில் நடு கடலில் 42. கி.மீட்டர் நீள பாலம்.

சீனாவில் கிழக்கு ஷாங்டான் மாகாணத்தில் உள்ள ஜியாஷோவ் வளைகுடாவில் கடலுக்கு நடுவில் 42 கி.மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு குயிங்டோ என பெயரிட்டுள்ளனர். இது குயிங் மோவ் துறைமுக நகரையும், ஹங்டாவ் தீவையும் இணைக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக இப்பாலம் கட்டப்பட்டது. இதற்காக ரூ.10,500 கோடி செலவிடப்பட்டுள்ளது. 5000-க்கும் மேற்பட்ட ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. சமீபகாலமாக சீனா பல உலக சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நேற்று திறந்து வைக்கப்பட்ட இந்த கடல் பாலம்தான் அதிக நீளமானது என்ற உலக சாதனையை படைத்துள்ளது. அதே போன்று பெய்ஜிங், ஷாங்காய் இடையே 5 மணி நேரத்தில் கடக்க கூடிய புல்லட் ரெயில் இயக்கப்படுகிறது.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் 90-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நேற்று பொதுமக்கள் உபயோகத்துக்காக இது திறந்து விடப்பட்டது. இதன் மூலம் குயிங்டோ- ஹாங்டோ நகரங்களை சுமார் 20 முதல் 40 நிமிடங்களில் கடக்க முடிகிறது. இப்பாலம் கட்டியதன் மூலம் குயிங்டோ துறைமுகத்தின் வருமானம் பெருகும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த ரெயில் உலகிலேயே அதிவேகத்துடன் இயங்கும் ரெயில் என்ற பெருமையை பெற்றுள்ளது. உலகிலேயே மிக நீளமான இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு கொண்ட நாடு என்ற அந்தஸ்தையும் சீனா பெற்றுள்ளது. சீனா துர்மெனிஸ்தான் இடையே 8700 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது கஜகஸ்தான் எல்லை வழியாக வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக