வெள்ளி, 1 ஜூலை, 2011

இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன் நாட்டினருக்கு இனி சவுதியில் விசா இல்லை

சவுதி அரேபியா பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா இடையில் தொழிலாளர்கள் நலன் தொடர்பாக அண்மையில் நடந்த சர்ச்சையை தொடர்ந்து, சவுதி அரேபியா தொழிலாளர் அமைச்சகம் இனிவரும் நாட்களில் இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன் நாட்டினருக்கு வேலை விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி தெரிவிக்கிறது. 15 இலட்சத்திற்கும் அதிகமான இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன் நாட்டினர் சவுதி அரேபியாவில் வேலைப் பார்த்து வருகின்றனர். தொழிலாளர்களின் குறித்த மாத ஊதியம் உட்பட பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா விதித்த கடுமையான தேவைகள் மற்றும் நியாயமற்ற கட்டுப்பாட்டு விதிகளை காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசு அறிவித்தது.
இந்தோனேஷியா வேலைக்காரி தூக்கிலிடப்பட்டதை தங்களுக்கு சவுதி அரசாங்கம் முன்னர் அறிவிக்க வில்லை என்றும் அதனால் சவுதிக்கு தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த முடிவு செய்வதாகவும் இந்தோனேசியா ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக