செவ்வாய், 19 ஜூலை, 2011
கருகியது 17,000 பாஸ்போர்ட் - சவூதி அரேபியா
கடந்த வாரம் சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த ஜித்தா என்னும் நகரில் மதினா நெடுஞ்சாலையில் உள்ள ஆறு மாடி கட்டிடங்களில் வணிக குழுமங்களான ஈசாயி குழுமம் என்ற ஒன்றில் தீடிரென்ன தீ பிடிக்க ஆரம்பித்தது. திடிரென நடந்த இந்த தீ விபத்தில் சவூதி நாட்டில் உள்ள அனைத்து கட்டிட பணி சமதம்ப்பட்ட அனைத்து ஆவணகளும் கருகின.மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 17 ஆயிரம் பாஸ்போர்ட்டுகளும் கருகின. இந்த விபத்தில் ஏற்ப்பட்ட சேதம் 5 பில்லியன் ரியால்களுக்கு மேல் இருக்கும் என தெரிகிறது.
எதிர்ப்பாராமல் நடந்த இந்த சம்பவத்திற்கு முறையான பரிகாரங்களை மேற்கொள்ளும் என்றும் அதற்காக 20 மில்லியன் ரியால்களை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் எறியப்பட்ட ஆவனைகள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றிக்கான பரிகாரங்களை மேற்கொள்ள 75 நாட்கள் தேவைப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஜித்தாவில் இதன் சம்மதமாக ஆக வேண்டிய செயல்களை மேற்கொள்ள நிறுவனம் சார்பாக சட்ட தரணிகள் குழுவொன்று முகாமிட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு பணியாளர்கள் அனைவரும் தத்தம் தூதரகத்தில் புதிய பாஸ்போர்ட் வாங்கி கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.

0 comments:
கருத்துரையிடுக