சனி, 23 ஜூலை, 2011
காலாவதியான பாஸ்போர்டில் வந்தவர் சென்னையில் கைதானார்
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர் ரஹமத்துள்லா. இவரின் வயது 39 . இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றிருகிறார். அங்கு கட்டிட பணியாளராக வேலைப்பார்த்து வந்திருக்கிறார். குவைத் நாட்டில் தொடர்ந்து வேலை பார்த்து வந்த ரகுமத்துள்ளவுடைய பாஸ்போர்ட் கடந்த 2005 ஆம் ஆண்டு காலாவதி ஆகிவிட்டது. இதனை அறிந்த அவர் வேலைப்பார்க்கும் நிறுவனம் அவரை பாஸ்போர்ட் புதுப்பித்து வர சொல்லி இருகிர்றாக்கள். ஆணால் ரஹ்மத்துல்லா அவர்கள் பாஸ்போர்டை புதுப்பிக்காமல் ஓட்டல், சூப்பர் மார்கெட் என பல இடங்களில் வேலைப் பார்த்து வந்திருக்கிறார். இதனை அறிந்த குவைத் நாட்டு காவல் துறையினர் கடந்த 2008 ஆம் ஆண்டு ரஹ்மாத்துல்லாவை கைது செய்தனர்.
குவைத் நாட்டில் கைது செயப்பட்ட ரஹ்மத்துல்லா கடந்த இரண்டரை ஆண்டுகள் கழித்து சற்று தினக்களுக்கு முன் விடுதலை செயப்பட்டார். விடுதலை செயப்பட்ட ரஹ்மத்துல்லா தன்னுடைய சொந்த நாட்டிற்கு செல்வதற்காக காலாவதியான தன்னுடைய பாஸ்போர்டில் பயணம் செய்ய முறையான ஆவணம் கேட்டு இருக்கிறார். ஆனால் அங்கு உள்ள காவல்துறையினர் ரஹ்மத்துல்லா காலாவதியான பாஸ்போர்டால் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக அவருக்கு அளித்த சான்றிதல்களில் குறிபிட்டுள்ளார்கள். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த இவரை முறையான ஆவணங்கள் இல்லாததால் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

0 comments:
கருத்துரையிடுக