வெள்ளி, 15 ஜூலை, 2011
விண்ணில் ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி.
இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி17 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.48 மணிக்கு வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது. தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-12 உடன் அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளில் 12 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நாட்டின் தொலைத்தொடர்பு சேவைகளுக்கும், வானிலை கணிப்புகளுக்கும் பயன்படுத்தப்படும்.
இந்த செயற்கைகோளை ராக்கெட்டுடன் இணைக்கும் பணி கடந்த 12-ந்தேதி நிறை வடைந்தது.செயற்கை கோளுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை பறக்க விடுவதற்கான 53 மணி நேர கவுண்டவுன் கடந்த 13-ந்தேதி காலை 11.48 மணிக்கு தொடங்கியது. கவுண்டவுனில் எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை. கவுண்டவுன் இன்று மாலை 4.48 மணியுடன் நிறைவு அடைந்தது. கவுண்டவுன் முடிவடைந்ததும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் பறக்க விடப்பட்டது. இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது.
இன்று ஏவப்பட்ட ஜிசாட்-12 செயற்கை கோளின் ஆயுள் காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

0 comments:
கருத்துரையிடுக