சனி, 16 ஜூலை, 2011

கவுஹாத்தி - புரி ரயிலுக்கு குண்டுவைத்த தீவிரவாத இயக்க தலைவன் கைது!

கவுஹாத்தி - புரி எக்ஸ்பிரஸ் ரயிலை குண்டு வைத்துக் கவிழ்த்த தீவிரவாத அமைப்பின் தலைவனை போலீசார் கைது செய்துள்ளனர்அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து புரி நகருக்கு இந்த ரயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. அந்த ரயில் ரங்கியா- காக்ராபூர் இடையே சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் 3 அடி தூரம் பெயர்த்து எறியப்பட்டது. இதனால் கவுகாத்தி-புரி எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் மற்றும் 6 பெட்டிகள் தடம் புரண்டன. விபத்தில் 93 பயணிகள் படுகாயம் அடைந்தனர். ரயில் கவிழ்ப்புக்கு காரணமானவர்கள் கண்டுபிடிப்பது பற்றி போலீசாரும் ராணுவத்தினரும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ரயில் கவிழ்ப்புக்கு காரணமான ஆதிவாசி மக்கள் ராணுவம் என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவன் சில்வியா ஒரங், பகன்பரா என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸ், ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சில்வியா ஒரங்கை கைது செய்தனர். அவனிடம் ரெயில் கவிழ்ப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக