புதன், 5 அக்டோபர், 2011

மீண்டும் ஒரு ஆபத்து

சமீபத்தில் பேருந்து அளவிளான அமெரிக்க செயற்கைக்கோள் துண்டுதுண்டாக உடைந்து பூமியில் விழுந்தது. அது விழும் பொழுது ஆபத்து ஏற்ப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே எந்த ஒரு ஆபத்தின்றி கனடாவில் விழுந்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு ஆபத்தாக ஜெர்மனியை சேர்ந்த செயற்கைக்கோள் ஒன்று பூமியை நோக்கி  வந்துகொண்டிருப்பது தெரிய வந்தது.
இந்த மாத இறுதியில் பூமியில் விழ இருக்கிறது என்றும், மேலும் இந்த செயற்கைக்கோள் சமீபத்தில் பூமியில் விழுந்த நாசா செயற்க்கைகோளை விட ஆபத்தானது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். கடந்த 1999 ஆம் ஆண்டு 2.4 எடை கொண்ட ரோஸாட் எனப்படும் ஜெர்மணி நாட்டு செயற்கைக்கோள் செயல் இழந்தது. உடைந்த பாகங்கள் கடந்த 12 ஆண்டாக விண்ணில் மிதந்து கொண்டு வருகிறது. அந்த உடைந்த பாகங்கள் ஒவ்வன்றும் 400 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கலாம் . அது பூமியில் விழ இருக்கிறது என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த செயற்கை கோள்களின் உடைந்த பாகங்கள் எங்கு விழ கூடும் என கணிக்க முடியாததால் பூமியில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நன்றி தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா. இன்.  

0 comments:

கருத்துரையிடுக