சனி, 1 அக்டோபர், 2011

இந்தியாவைச சேர்ந்த மூவருக்கு அமெரிக்காவில் விருது

அமெரிக்காவில் பயின்று வரும் பல்கலைகழக மாணவர்களில் அதிகளவில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளுக்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்படும் வெள்ளை மாளிகை குழுவினால் விருதுக்குரிய ஆராயிச்சியாளர்கள், மற்றும் கண்டுபிடிப்பாளார்கள் தேர்வு செய்யப்பட்டு அமெரிக்க தேசிய அளவில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
அமெரிக்க ஜனாதிபதி இந்த ஆண்டு விருது பெரும் 12 பெயர் கொண்ட பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பட்டியலில் மூவர் இந்தியாவைச் சேர்ந்தவர். ஸ்ரீனிவாச வரதன். இவர் நியுயார்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர். ராகேஷ் அகர்வால். இவர் பர்டியு பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர். ஜெயந்த் பாலிகா. இவர் வடக்கு கரோலினா பல்கலைகழகத்தைச் சேர்ந்தவர். ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வரும் இந்த விருதில் இந்த ஆண்டு மட்டும் ஒரே ஆண்டில் 3 இந்தியகளுக்கு விருது வழங்குவது இதுவே முதன் முறை. நன்றி வீரகேசரி ஆன்லைன். 

0 comments:

கருத்துரையிடுக