சனி, 1 அக்டோபர், 2011

இந்தியர்களுக்கு குவைத்தில் விசா கட்டுப்பாடு

குவைத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வேளைகளில் பணிபுரிந்து வருகின்றன. அதிலும் அதிகளவில் அதுவும் 69 சதவீதம் பேர் வேலை பார்த்து வருவது இந்தியா மற்றும் எகிப்த் நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கு அதிகளவில் விசா வழங்கியதால், இந்தியா மற்றும் எகிப்த்தைச்  சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதில் சில கட்டுபாட்டினை கொண்டு வர திட்டமிட்டுள்ளது குவைத் அரசு. மேலும் இது தொடர்பான அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என குவைத் குடியுரிமை இயக்குணரக வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திடீர் முடிவால் விசா கட்டுபாட்டில் ஏற்ப்படும் பிரச்சனைகளை  இந்தியர்கள் எதிர்நோக்கக் கூடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. மேலும் குவைத்தில் தற்போது ஈராக், ஈரான், சிரியா, பாகிஸ்த்தான், உட்பாக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேந்தவர்கள் குவைத்தில் உள்ள நிலையற்ற அரசியல் தன்மை காரணத்தினால் குவைத்தில் குடிஎரிகின்றனர். இதனால் குவைத் நாட்டு அரசு ஈராக், ஈரான், சிரியா, பாகிஸ்தான், உட்பாக், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தடை செய்துள்ளது. நன்றி தினக்கரன்.காம்.

0 comments:

கருத்துரையிடுக