முஸ்லிம் லீக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்லிம் லீக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 அக்டோபர், 2009

ஹைதராபாத் செய்தியாளர் கூட்டத்தில் முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தி கருத்தரங்கு நடத்தி அதில் இஸ்ரேல் போன்ற வெளிநாட்டு பேராசிரியர்களை பேச வைத்ததன் மூலம் இந்திய உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய தலையீட்டை அனு மதித்துள்ளது கடும் கண்ட னத்திற்குரியது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது. இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்து அவ்வப்போது ஆங்காங்கே திணிக்கப்பட்டு வரும் நேரத்தில் இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பால கிருஷ்ணன் புது டெல்லியில் எம்.கே. நம்பியார் நினைவு சொற் பொழிவில் சிறப்புரை யாற்றியபோது பொது சிவில் சட்டம் என்பது மிக மிக உணர்வுப்ப+ர்வமான பிரச்சினை. ஏனெனில் இந்தியாவில் பல்வேறு மத, சாதி, இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர் களிடையே பொது சிவில் சட்டம் போன்ற ஒன்றை அமல்படுத்துவது என்பது மிகவும் கடினமானது என்று கருத்து தெரிவித் திருந்தார். பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொண்டு வரவேற்கத்தக்க இந்த கருத்தை அவர் வெளிப்ப டுத்தியதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னையில் எம்.கே. நம்பியார் நினைவு அறக் கட்டளை சார்பில் கடந்த 10-ம் தேதி இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம் என்ற தலைப்பில் நடை பெற்ற ஒரு கருத்தரங்கில் இஸ்ரேல் நாட்டின் பேராசிரியர்கள் ஷிமோன் ஷெட் ரிட், ஹிராம் சூடோஸ் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியாவில் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
வெளிநாட்டைச் சேர்ந் தவர்கள் இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிட்டு உணர்ச்சிமயமான ஒரு விஷயத்தில் கருத்து தெரிவித்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. இவர்கள் பங்கேற்ற இந்த விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். கோகலே தலைமை ஏற்றுள்ளார் என்ற செய்தி துரதிருஷ்டவசமானது. நாம் அறிந்த வரையில் இந்திய அரசு பண்டித ஜவஹர்லால் நேரு அளித்துள்ள உறுதிமொழி இன்னமும் தொடர்வதாகவே நம்புகிறோம். சிறு பான்மை மக்கள் தாங்க ளாகவே முன்வந்து தங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று கூறுகின்ற வரையில் அரசு ஒருபோதும் பொது சிவில் சட்டம் பற்றிய எந்த ஒரு முடிவையும் அறிவிக்காது என்று நேருவின் அந்த உறுதிமொழியில் தெளி வாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹபொது சிவில் சட்டம் பற்றி அரசியல் தலைவர்களும், நீதியரசர்களும் ஆட்சியாளர்களும் பின்பற்ற வேண்டிய கருத்தை நேரு அவர்களுடைய உறுதிமொழி தெளிவுபடுத்தியிருக்கிறது. இதற்கு மாற்றமான கருத்தை யார் பேசினாலும் அது இந்த நாட்டில் தேவையற்ற குழப்பத்தையே விளைவிக்க வழி வகுக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளது.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.

சனி, 26 செப்டம்பர், 2009

விண்ணப்பித்த அனைவருக்கு ஹஜ் பயண வாய்ப்பு: தேசிய லீக் வலியுறுத்தல்

 ஹஜ் பயணம் செல்வதற்காக தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் விசா கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என தேசிய லீக் வலியுறுத்தியுள்ளது. 
இதுதொடர்பாக தேசிய லீக் தலைவர் பசீர் அகமது விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவின் மக்கள் தொகையில் 23 கோடிக்கும் அதிகமான முஸ்லிம் உள்ளனர். ஆனால் மத்திய அரசு சரியாக கணக்கெடுப்பு நடத்தாமல் 15 கோடி முஸ்லிம் உள்ளதாக கூறுவதால் ஹஜ் பயணத்துக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் விசாக்களை மட்டுமே சவூதி அரசு வழங்குகிறது. 
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 1991ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முஸ்லிம் கணக்கெடுப்பின் படி மத்திய அரசு ஹஜ் விசா தருகிறது. ஆனால் இன்றைய தமிழக மக்கள் தொகையில் 80 லட்சத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் உள்ளனர். 8 ஆயிரம் விசா தரவேண்டிய தமிழகத்திற்கு 3300 விசாதான் கிடைக்கிறது. ஆனால் கேரளாவுக்கு 13 ஆயிரம் விசா வழங்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்?
எனவே தமிழகத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் விசா கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். வக்ப் போர்டுக்கு சொந்தமான வீட்டுமனை விற்பனைக்கு குலுக்கலில் இடம் கிடைக்காதவர்களுக்கு அவர்களின் விண்ணப்ப தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

காசர்கோட்டில் முஸ்லிம் லீக் அலுவலகம் எரிப்பு


காசர்கோடு மாவட்டத்தில் முஸ்லிம் லீக் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதி யில் பதற்றமான சூழ்நிலை உருவாகி யுள்ளது. இதை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காசர்கோடு டவுன் பகுதியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சி அலுவலகம் மீது ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில், அலுவலகம் முழுவதும் எரிந்து சாம்பலானது. கேரளாவில் காசர்கோடு மாவட்டம் திருக்கருப்பூரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு முஸ்லிம் லீக் கட்சிதான் காரணம் என மார்க்சிஸ்ட் குற்றம்சாட்டியது.
 தகவல் அறிந்த காசர்கோடு எஸ்.பி. ராமதாஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.