செவ்வாய், 15 செப்டம்பர், 2009

கோவை குண்டுவெடிப்பில் 13 ஆண்டு தண்டனை பெற்ற 10 கைதிகள் இன்று விடுதலை

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் நன்னடத்தை விதிகளை கடைப்பிடிக்கும் கைதிகளை விடுவிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள கைதிகளின் நடத்தைகளை ஆய்வு செய்தனர். 
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 10 பேருக்கு 13 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் 10 ஆண்டு தண்டனையை முடித்துள்ளனர். அதனால் நன்னடத்தையின் கீழ் விடுவிக்க மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை பரிசீலித்த கமிட்டி, விண்ணப்பித்த கைதிகள் முகமது இப்ராகிம், அப்துல் ரகுமான், அப்துல் பாருக், அப்பாஸ், முகமது ரபீக், அப்துல் ரகூப், அஸ்ரப், யூசுப் (எ) ஷாஜகான், பக்ருதீன் அலி, ஷாகுல் அகமது ஆகிய 10 பேரை விடுவிக்க அரசுக்கு கமிட்டி பரிந்துரைத்தது. 
அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, குறிப்பிட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, இன்றுடன் 10 ஆண்டு சிறைவாசம் முடித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று 10 கைதிகள் விடுதலை செய்யப்படுவர்.  

0 comments:

கருத்துரையிடுக