சனி, 1 அக்டோபர், 2011

சீனாவில் அதிவேக ரயில்கள் மோதி 245 பேர் காயம்

கடந்த செவ்வாய் கிழமையன்று சீனாவில் அதிவேக இரு ரயில்கள் மோதி விபத்து ஆகிவிட்டது. சீனாவில் வர்த்தக நகரான ஷாங்காயில் உள்ள சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருக்கும் போது இரு ரயில்களும் மோதின.
தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வருகைதந்து பயணிகள் அனைவரையும் காப்பாற்றினர். இந்த விபத்தில் ரயிலில் காப்பாற்றப்பட்ட 500 பேர்களில் 245 பேர் உயிர் சேதமின்றி காயத்துடன் தப்பினர். ரயிலில் பயணித்த பெரும்பாலானோர் தலையில் காயத்துடனும், சிலர் கை கால் எலும்பு முறிந்து  மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சமீக்ஜை கோளாறால் இந்த விபத்து ஏற்ப்பட்டது என விசாரணையில் தெரிய வந்தது. இதுபோல் கடந்த ஜூலை மாதம் சமீக்ஞை கோளாறால் புல்லட் ரயில் மோதி 40 பேர் உயிர் இழந்தனர் 200 ௦பேர் காயமடைந்தனர். சமீக்ஞை   சரியாக பராமரிக்காததால் தான் ரயில்கள் விபத்துக்குள்ளாகிவிட்டது என அந்நாட்டு மக்கள் குற்றம் தெரிவித்துள்ளனர். சமீக்ஞை பராமரிப்பால் இல்லை மலை, இடி, மின்னல் ஆகியவைகளால் தான் சமீக்ஞை கோளாறாகி விபத்து ஏற்ப்படுகிறது என ரயில்வே அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நன்றி தினக்குரல். காம். 

0 comments:

கருத்துரையிடுக