செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

மக்கா ஹரமில் ரமலானில் 18000 பாதுகாப்பு அதிகாரிகள்: சவுதி அறிவுப்பு

ரமலான் மாதத்தில் புனித பயணம் மேற்கொள்ளுபவர்களுக்கு உதவுவதற்காக 18000 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று மக்கா போலீஸ் உயர் அதிகாரி கர்னல் யூசுப் மதர் கூறினார். பிக்பாக்கட், ராப்ரி போன்ற செயல்களில் ஈடுப்பட்டு ஹரமினுடைய புனித தன்மைக்கு கேடு விளைவிப்பவர்களை பிடிப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், இதற்காக வெவ்வேறு இடங்களில் 80௦௦க்கும் மேற்ப்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரமலானில் கூட்டம் அதிகமுள்ள நேரங்களில் கஃபாவை சுட்டியுள்ள மதாஃபின் அருகில் இஹ்ராமில் இல்லாதவர் செல்ல தடை விதிக்கப்படும் என்றும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

0 comments:

கருத்துரையிடுக