செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

சேலம் நகரில் மசூதியில் தங்கக் கலசம்

மசூதியின் மீது 40 அடி கோபுரமும், அதன் மீது 3 அடி உயரத்தில் தங்கத்தகடுகளால் மூடப்பட்ட கலசமும் இருக்கும் அபூர்வமான மசூதியை காண வேண்டுமென்றால், சேலம் நகரின் மைய பகுதியிலுள்ள முகமதுபுறா தெருவுக்கு வாருங்கள். இங்குள்ள நூறு ஆண்டுகள் பழமையான மசூதியில்தான் இப்படிப்பட்ட அபூர்வம் இருக்கிறது. இது போன்ற தங்க கோபுரம் (மினார்) தமிழகத்தில் வேறு எங்குமே இல்லை என்கிறார்கள். தான் மட்டும் இப்படியரு மசூதியை கட்டியதாக யாரும் கருதிவிடக்கூடாது என்று நினைத்த பிரபல தோல் வணிகரான ஜமால்மொய்தீன், அப்பகுதி இஸ்லாமிய மக்களிடமிருந்து அவர்களால் முடிந்த வெள்ளிக்காசுகளை தருமாறு கேட்டுப் பெற்று, அவையனைத்தையும் கலசத்தின் அடிப்பகுதியில் கொட்டி, மசூதியை பொது சொத்தாக மாற்றி விட்டாராம்.

0 comments:

கருத்துரையிடுக