சனி, 8 ஆகஸ்ட், 2009

தக்கலை போலீஸ்நிலையத்தில் மோதல்: இன்ஸ்பெக்டர் - வக்கீல் மீது 3 பிரிவுகளில் வழக்கு


தக்கலை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுதேசன். ஒரு வழக்கு விஷயமாக வக்கீல்கள் சுபாஷ், ரமேஷ், மணிகண்டன் ஆகியோர் நேற்று காலை போலீஸ்நிலையத்துக்கு வந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் சுதேசனுக்கும், வக்கீல் சுபாசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. திடீரென அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த நாகர்கோவில் மற்றும் தக்கலையைச்சேர்ந்த ஏராளமான வக்கீல்கள் தக்கலை போலீஸ்நிலையம் முன்பு கூடினர். அவர்கள் இன்ஸ்பெக்டர் சுதேசன் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு சண்முகவேல், போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களை சமாதானம் செய்தார்.

இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் சுதேசன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியிலும், வக்கீல் சுபாஷ் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்ந்தனர். மேலும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி தனித்தனியாக தக்கலை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.

2 புகார்கள் மீதும் போலீஸ்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வக்கீல் சுபாஷ் மீது கெட்டவார்த்தை பேசுதல், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் என 3 பிரிவுகளிலும், இன்ஸ்பெக்டர் சுதேசன் மீது கெட்டவார்த்தை பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது


0 comments:

கருத்துரையிடுக