சனி, 8 ஆகஸ்ட், 2009

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் கன்னியாகுமரியில் சுற்றும் காதல் ஜோடிகள்: போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்

கன்னியாகுமரி:சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மத்தியில் காதல் ஜோடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் பள்ளி- கல்லூரி காதல் ஜோடிகள் தான் அதிகம் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.

நாகர்கோவில் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் புத்தகபைகளை சுமந்து கொண்டு கன்னியா குமரியில் காதல் ஜோடிகளாக வலம் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அவர்கள் வீவ்டவர், காந்தி மண்டபம், சன்செட் பாயிண்ட், ஆராட்டு மண்டபம் உள்ளிட்ட ஆள் நடமாட்டம் குறைந்த பகுதி களில் ஒதுக்குப்புறமாக சென்று அமர்ந்து கொள்கின்றனர். நேரம் செல்ல செல்ல காதல் ஜோடிகள் எல்லை மீறும் அவலமும் அரங்கேறி வருகிறது.

காதல் ஜோடிகள் அத்து மீறுவதை தடுக்க கன்னியாகுமரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் பள்ளி- கல்லூரி காதல் ஜோடியினரை பிடித்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர்

0 comments:

கருத்துரையிடுக