புதன், 26 ஆகஸ்ட், 2009
மலேசியாவில் வேலை தேடி வந்த 62 இந்தியர்கள் தவிப்பு
மலேசியாவில் வேலை தேடி வந்து ஏஜெண்டிடம் ஏமாந்த 62 இந்தியர்கள் கோலாலம்பூரில் தவித்து வருகின்றனர்.
மலேசியாவிலுள்ள மஸாய், ஜோஹார் ஆகிய இடங்களில் வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தும, இந்திய ஏஜெண்ட் ஒருவர் 62 இந்தியர்களை கடந்த வாரம் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அழைத்து வந்துள்ளார்.இதற்காக அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர்களை கோலாலம்பூரிலேயே தவிக்க விட்டுவிட்டு அங்கிருந்து தலைமறைவானார்.
செய்வதறியாது திகைத்து நின்ற அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோதே, மேற்கண்ட தகவல் தெரியவந்தது.
தற்போது சமுதாய கூடம் ஒன்றில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூரிலிருந்து வெளியாகும் " மக்கள் ஓசை " என்ற நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
பணம் கொடுத்து ஏமாந்த இந்தியர்கள் 62 பேரில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதும்,இவர்கள் நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் மலேசியா வேலைக்காக ஏஜெண்டிடம் கொடுத்துள்ளனர் என்பதும் இங்கு சோகத்துடன் குறிப்பிட வேண்டிய விடயம் ஆகும்
0 comments:
கருத்துரையிடுக