ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009
அழிவுப் பாதையில் பாஜக:
ஆர்எஸ்எஸ் தலைவனுடன் அத்வானி இன்றும் ஆலோசனை
பா.ஜ. மூத்த தலைவர் அத்வானியும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் 2வது நாளாக இன்றும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை ஒற்றுமையாய் இருந்து தீர்த்துக் கொள்வதாக அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். மக்களவை தேர்தல் தோல்வி, ஜஸ்வந்த்சிங் வெளியேற்றம், வசுந்தரா தேவி, கந்தூரி போன்ற மாஜி முதல்வர்களின் தலைமைக்கு எதிரான போர்க்கொடி, தலைமை மீது குல்கர்னி, யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி, மேனகா காந்தி நடத்தி வரும் தாக்குதல்கள் என பல்வேறு பிரச்னைகளில் பா.ஜ. சிக்கி தவித்து வருகிறது. அதன் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்., சிக்கலில் இருந்து பா.ஜ.வை மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. பா.ஜ.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அனந்தகுமார் ஆகியோர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். அவரை அத்வானி நேற்று மாலை சந்தித்து பேசினார். இதற்கு முன்பாக மற்றொரு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி 2 முறை சந்தித்து பேசினார்.
Labels:
அழிவுப் பாதையில் பாஜக,
பாஜக,
RSS
0 comments:
கருத்துரையிடுக