ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு சீட்டு கம்பெனிகள் டெபாசிட் வசூலிக்க தடை

சீட்டு கம்பெனிகள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் பொறுப்பு வகிக்கும் நாராயண ராவ் அறிவித்துள்ளார். தடை உத்தரவு விவரம் வருமாறு: பொது நலன் கருதியும் நாட்டின் கடன் வழங்கு முறையை ஒழுங்கு முறைபடுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படு கிறது. இதன்படி வங்கிகள் அல்லாத இதர நிதி நிறுவனங்கள் (எம்என்பிசி) பொதுமக்களிடமிருந்து டெபாசிட் வசூலிக்க தடை விதிக்கப்படுகிறது. எனினும், அந்தக் கம்பெனிகள் அதன் பங்குதாரர்களிடமிருந்து டெபாசிட் களைப் பெறலாம். அதுவும் ரிசர்வ் வங்கியின் ஆணைகளுக்கு உட்பட்டு நடை பெற வேண்டும். பங்குதாரர் அல்லாத ஒருவரிடமிருந்து பெறப்பட்ட டெபாசிட்டுகளை அவற்றுக்கு உரிய கால அவகாசம் முடிந்ததும் திரும்பச் செலுத்த வேண்டும். மீண்டும் டெபாசிட்டுகளைப் புதுப்பிக்கக் கூடாது. இவ்வாறு ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் மொத்தம் 9,900 சீட்டு கம்பெனிகள் இயங்கி வருவதாக கார்ப்பரேட் நிறுவன விவகார அமைச்சக புள்ளி விவரம் கூறுகிறது. 1982ம் ஆண்டு சிட் பண்டு சட்டத்தின்படி சீட்டு கம்பெனிகள் இயங்கும் முறை வரையறை செய்யப்பட்டுள்ளது. சீட்டு கம்பெனிகள் மாநிலத்தில் பதிவு செய்யப்படுகின்றன. அவை பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் பெரும் பட்சத்தில் ரிசர்வ் வங்கி யின் அதிகார வரம்புக்குள் எம்என்பிசி வழிகாட்டு சட்டத்தின் கீழ் ஒழுங்கு படுத்தப்படுகின்றன. சீட்டு கம்பெனிகள் சீட்டு நடத்துவதுடன் இப்போது வங்கிகளைப் போல டெபாசிட் வசூலித்து வருகின்றன. வங்கிகளை விட அதிக வட்டி தரு வதாகவும் கூறி வருகின்றன. ஏற்கனவே, சீட்டு கம்பெனிகள் மீது பல்வேறு புகார் எழுந்து ள்ளதால், பொது மக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும் டெபாசிட்களை வங்கிகள் பக்கம் திருப்பவும், சீட்டு கம்பெனிகள் டெபாசிட் வசூலிக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.



0 comments:

கருத்துரையிடுக