சனி, 8 ஆகஸ்ட், 2009

ஈரான் அதிபர் தேர்தல் : யு.எஸ். நிலையில் திடீர் மாற்றம்

ஈரான் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாருக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கா, தற்போது அந்த நிலையை மாற்றிக்கொண்டு, அதிபர் அகமதினிஜாத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்று கூறியுள்ளது.

செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த வெள்ளை மாளிகை ஊடக செயலர் ராபர் கிப்ஸ், இது ஈரான் மக்களின் முடிவு என்றார்.

ஈரானின் தற்போதைய அதிபரான அகமதி நிஜாத், அந்நாட்டின் அதிபராக இன்று 2 ஆம் முறையாக பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிதத்தக்கது.

முன்னதாக அகமதினிஜாத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து அண்மையில் அங்கு புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.இதில் அகமதி நிஜாத் மீண்டும் வெற்றி பெற்றார்.

ஆனால் இதை அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.வாக்குப்பதிவில் மோசடி செய்து அகமதினிஜாத் வெற்றி பெற்றதாக அவரை எதிர்த்து போட்டியிட்ட மவுசவி குற்றம்சாற்றினார்.

இது தொடர்பாக எதிர்க்ட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தபோது, இந்த கலவரத்தை அமெரிக்காதான் தூண்டிவிட்டு வருவதாக ஈரான் தலைமை மத குருவும், உச்ச அதிகார தலைவருமான அயாத்துல்லா கெமேனி குற்றம் சாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக