தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் பாகிஸ்தான் தலைவர் பைதுல்லா மசூத், அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை அந்த இயக்கத்தின் தளபதி மறுத்துள்ளார்.
பாகிஸ்தானில் செயல்படும் தாலிபான் அமைப்பின் தலைவரான பைதுல்லா மசூத், கடந்த 2 நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் நேற்று செய்தி வெளியானது.
இதனை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கும் உறுதிபடுத்தி இருந்தார்.
இந்நிலையில், இதனை மறுத்துள்ள தாலிபான் இயக்கத்தின் மூத்த தளபதியாக கருதப்படும் ஹக்கிமுல்லா மசூத், பைதுல்லா மசூத் இறந்துவிட்டதாக வெளியான செய்தி கேலிக்கூத்தானது என்றும், இவ்வாறு செய்தி பரப்பியது உளவுத் துறை ஏஜென்சிகள்தான் என்றும் பிபிசி உருது சேவையின் இணைய தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக