வியாழன், 27 ஆகஸ்ட், 2009

பஸ் மோதி வடசேரியை சேர்ந்த முஸ்லீம் மாணவர் பலி

வடசேரியை சேர்ந்தவர் அப்துல்மஜித் இவரது மகன் காஜாமைதீன் (வயது19). இவன் அஞ்சுகிராமம் அருகே உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்கள் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த விஷ்ணு (வயது19). ராமவர்மபுரத்தை சேர்ந்த உதயகுமார், பொன்ராஜ் ஆகிய 4 பேரும் 2 மோட் டார் சைக்கிள்களில் பார்வதி புரத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்றனர். இரவு அங்கிருந்து வீடு திரும்பினார்கள். விஷ்னு, காஜாமைதீன் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், உதயகுமாரும், பொன்ராஜூம் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர்.

கலெக்டர் அலுவலக சாலையில் வந்து கொண்டிருந்த போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் லேசாக மோதியது. இதில் நிலைதடுமாறி காஜாமைதீன் கீழே விழுந்தார். பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று காஜாமைதீன் மீது ஏறியது. இதில் உடல் நசுங்கி காஜாமைதீன் பலியானார்.

படுகாயம் அடைந்த விஷ்ணு, உதயகுமார், பொன்ராஜ் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காஜாமைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ்சை போலீசார் தேடி வருகிறார்கள்

0 comments:

கருத்துரையிடுக