கன்னியாகுமரி : அதிக காரம் கொண்ட உணவு, பாஸ்ட் புட் போன்றவைகளால் தென் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று கன்னியாகுமரியில் நேற்று தொடங்கிய அறுவை சிகிச்சை நிபுணர்களின் கருத்தரங்கில் ஜனாதிபதி விருதுபெற்ற லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பழனிவேலு பேசினார்.
மாறிவரும் சூழ்நிலையில் பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்படும் காய்கறிகள் காரம் அதிகம் உள்ள உணவு, ருசியான பாஸ்ட் புட் போன்றவைகளால் குடல், மலக்குடல், கல்லீரல், பித்தப்பைகளில் புற்றுநோய் உருவாவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் மன அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவைகளால் உணவு குழாய்களில் புற்றுநோய் ஏற்படுகிறது. மது அருந்துவதால் உணவு குழாய் மட்டுமின்றி கல்லீரலிலும், கணையத்திலும் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். கடந்த 10 ஆண்டுகளாக மலக்குடல் மற்றும் கல்லீரலில் அதிகமாக புற்றுநோய் வருகிறது. இது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. உணவு குழாய்களில் நெஞ்சு எரிச்சல் அதிகமாக இருந்தால் அதை அலட்சியபடுத்தாமல் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சைபெற வேண்டும்.
தண்ணீர் அதிகமாக குடிக்காததால் பித்தப்பை சுருங்கி விரிவதில் சிக்கல் ஏற்படுகிறது. வயிறு பருமன் ஆவதை தடுக்க கொழுப்பு சத்து உள்ள உணவுகளை குறைக்க வேண்டும். உடற்பயிற்சி முறையாக செய்ய வேண்டும். பள்ளி கூடங்களில் சுகாதார கல்விதிட்டம், உணவு உட்கொள்ளுதல் குறித்தும் பாடதிட்டங்களை அறிமுகபடுத்த வேண்டும்.
0 comments:
கருத்துரையிடுக