திங்கள், 31 ஆகஸ்ட், 2009

லாலு சாபம் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ. அழியும்


செய்த தவறுகளின் பலனாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா அழியும் என்று ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் கூறினார்.டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நாட்டுக்கும், மக்களுக்கும் செய்த தீமைகள், துரோகங்கள் ஆகியவற்றுக்கான பலன்களை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.வும் அனுபவிக்கிறது.
இவை இரண்டும் விரைவில் அழியும், குஜராத் கலவரத்தையும், சங்பரிவார் அமைப்பினர் செய்த கொடுமைகளையும் மக்கள் மறக்கவில்லை. மறக்கவும் முடியாது. பா.ஜ,வில் கோஷ்டி பூசல் தீர்ந்து, சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்று சிலர் கூறுவது நடக்காது. அடுத்த 2 ஆண்டுகளில் பா.ஜ. இருக்காது. இவ்வாறு லாலு பிரசாத் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக