திங்கள், 31 ஆகஸ்ட், 2009
அணு ஒப்பந்தம் அமெரிக்க நெருக்கடிக்கு அரசு பணிகிறது : மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நிருபர்களிடம் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் கூறியதாவது: அணு ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி சரண்டர் ஆகிவிட்டது. இப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த அணு மூலப்பொருள் சப்ளை செய்பவர்கள், வரி விதிப்பிலிருந்து தப்பிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளளது. அது மட்டுமின்றி, அணு மூலப் பொருள் சப்ளை செய்யும் போது இந்தியாவில் ஏற்படும் தொழிற்சாலை விபத்துக்கு ரூ.45 கோடி டாலர் நஷ்ட ஈடாக அமெரிக்க நிறுவனம் தர வேண்டும். இதற்கு விதி விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அணு விபத்து ஏற்பட்டால் அது பல லட்சம் மக்களை பாதிக்கும், இது பணம் மட்டும் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் தராமல் யூனியன் கார்பைடு நிறுவனம் ஏமாற்றி வருவதே இதற்கு உதாரணம். இவ்வாறு பிரகாஷ் கரத் கூறினார்.
Labels:
அணு ஒப்பந்தம்,
அமெரிக்கா,
அரசு
0 comments:
கருத்துரையிடுக