வெள்ளி, 13 நவம்பர், 2009
தகவல் பெறும் தகவல் பெறும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005- வழிகாட்டி கையேடு
வியாழன், 29 அக்டோபர், 2009
குளச்சல் மீன்பிடிதுறைமுக பணி மீண்டும் நேற்று தொடங்கியது.
செவ்வாய், 27 அக்டோபர், 2009
1200 அரசு பணியிடங்களுக்கு நவம்பரில் குரூப்1 தேர்வு
ஞாயிறு, 25 அக்டோபர், 2009
போலீஸ் நிலையங்கள் நவீனமாகின்றன டயல் செய்தால் எப்ஐஆர் பதிவாகும்
செவ்வாய், 20 அக்டோபர், 2009
இலங்கை சென்ற தமிழகக் குழு முஸ்லிம்களை உதாசீனம் செய்துவிட்டது : முஸ்லிம்கள் குற்றச்சாட்டு
20 வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அறிக்கையில் எதனையும் குறிப்பிடவில்லை என முஸ்லிம் சமாதான செயலக இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதனை ஓர் இன ரீதியான ஒடுக்குமுறையாகவே நோக்க வேண்டும் என புத்தளம் இடம்பெயர் முகாமில் தங்கியிருக்கும் சிரேஷ்ட முஸ்லிம் பிரஜை ஒருவர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் இடம்பெயர் முகாமுக்கு விஜயம் செய்யுமாறு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
முஸ்லிம் இடம்பெயர் மக்கள் தொடர்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும், இதன் மூலம் அவர்களின் பக்கச் சார்பான தன்மை புலப்படுவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
வன்னி இடைத்தங்கல் முகாம்களுக்கும், மலையகத்திற்கும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
வெள்ளி, 18 செப்டம்பர், 2009
காவல்நிலையங்கள் நெட்வோர்க் மூலம் இணைப்பு - ப. சிதம்பரம்
வெள்ளி, 11 செப்டம்பர், 2009
குரூப் 'பி' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய், 8 செப்டம்பர், 2009
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு-தேர்வு ரத்து, விரும்பினால் எழுதலாம்

புதன், 2 செப்டம்பர், 2009
ஹஜ் ஒதுக்கீடு விதிகளில் மாற்றம்

செவ்வாய், 1 செப்டம்பர், 2009
ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க நுகர்வோர் ஹெல்ப் லைன்: அமைச்சர் எ.வ. வேலு

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் நுகர்வோர் எண்ணிக்கை ரேஷன் கடைகளில் அதிகரித்து வருகிறது. கூட்டம் காரணமாக விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. தாமதம் ஏற்படுவதால் பொருள்கள் தட்டுப்பாடு என கூற முடியாது.
பிளாஸ்டிக் ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம்

மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி வேதியியல் பேராசிரியர் வாசுதேவன்கண்டுபிடித்த பிளாஸ்டிக் ரோட்டிற்கு, மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மறு பயன்பாட்டிற்கு பயன்படாத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட்கவர்கள், தெர்மாகோல் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தவும், பூமிவெப்பமடைவதை தடுக்கவும், மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி பேராசிரியர்வாசுதேவன் ஆராய்ச்சி மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி பிளாஸ்டிக்ரோடு அமைக்க முடிவு செய்தார். கழிவுகளை எரிக்காமல், தொழில் நுட்பத்தைப்பயன்படுத்தி ஜல்லிகளில் கலந்து பிளாஸ்டிக் கோட்டிங் கொடுத்து, அவற்றுடன்தார் சேர்த்து பிளாஸ்டிக் ரோடு அமைத்தார்.
பிளாஸ்டிக் ரோடு: உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பானபிளாஸ்டிக் ரோடு, முதலில் கோவில்பட்டியில் 2002ல் போடப் பட்டது. கிராமவளர்ச்சித் துறை மூலம் தமிழகத்தில் 2000க்கும் அதிகமான கி.மீ., பிளாஸ்டிக்ரோடுகள் போடப்பட்டன. மும்பை, கேரளாவில் ரோடுகள் அமைக்கும் பணிநடக்கிறது.தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இவரது ஆராய்ச்சிக்கு 50 ஆயிரம்ரூபாய் நிதி உதவி வழங்கி, பிளாஸ்டிக் ரோடு போடும் வழிமுறைகள் குறித்துஆய்வு செய்ய கேட்டது.
ஆய்வு அறிக்கையை வாசுதேவன் சமர்ப்பித்தார். அது புத்தகமாகவெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடுக்கு தியாக ராஜர் இன்ஜி., கல்லூரிக்குமத்திய அரசு காப்புரிமை 2006ல் வழங்கியது.நிதி உதவி: பிளாஸ்டிக் ரோட்டின்தன்மை, தரம், உழைப்பு, ஆயுள், பயன்கள் குறித்து ஆய்வு செய்ய, இரண்டாம்கட்டமாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆய்வு அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம்,பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள், சாதாரணரோட்டிற்கும், பிளாஸ்டிக் ரோட்டிற்கும் உள்ள வித்தியாசம், செலவுகள் விவரம்அடங்கிய குறிப்புகளை தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகங்களை இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து உள்ளாட்சிஅமைப்புகள் மற்றும் ரோடுகள் பராமரிப்புத் துறைகளுக்கும் அனுப்பியுள்ளது.அந்த புத்தகத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் ரோடுகள்தரமானதாகவும், நீடித்து உழைக்கக் கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அங்கீகாரம்: மத்திய கிராம வளர்ச்சி அமைச்ச கத்தின் தேசிய கிராமப்புறரோடுகள் வளர்ச்சி நிறுவனம், கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் தார் ரோடுகள்அமைக்க அங்கீகரித்து வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது. அதற்கான"கைடு லைன்' வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் தார் ரோடுகள்அமைக்க ஏற்பாடு செய்துள்ளது.
பேராசிரியர் வாசுதேவன் கூறியதாவது:மத்திய அரசு அளித்துள்ள கைடு லைன்மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பிளாஸ்டிக் தார் ரோடுகள் நீடித்து உழைக்கும்.சாதாரண தார் ரோட்டைக் காட்டிலும் ஐந்தாண்டுகள் கூடுதல் பலன் தரும்.மழைநீர் ஊடுருவி சாலைகள் பழுதடைவதில்லை. பராமரிப்பு செலவுகள்கிடையாது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.
சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவது தடுக்கப்படும். தட்பவெட்பநிலையை சீராக்க உதவும். பிளாஸ்டிக் கழிவுகளால் இவ்வுலகிற்கு ஏற்படும் அபாயத்தை நீக்கலாம். எனது முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த கல்லூரி நிர்வாகத்துக்கும், தொழில் நுட்பத்தில் உதவியவர்களுக்கும் நன்றி.
பிளாஸ்டிக் தார் ரோடு அமைக்க விரும்புவோர் 0452-2482240 என்றதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு வாசுதேவன் கூறினார்.
குளப்புறம் முதல் "மைலோடு" வழியாக களியங்காடு வரை 4 வழி சாலை பணிகள் 6 மாதத்தில் தொடங்கும் ஹெலன்டேவிட்சன் எம்.பி. தகவல்


