வியாழன், 18 மார்ச், 2010
இஸ்ரோவில் தீவிரவாதி தாக்குதல் கட்டுக்கதை - அமைச்சர்
புதன், 21 அக்டோபர், 2009
சந்திரயான் திட்டத்தில் இடம் பெற்ற அமெரிக்க விஞ்ஞானி இஸ்ரேல் உளவாளி!
செவ்வாய், 22 செப்டம்பர், 2009
ஓசன்சாட்-2 - பி.எஸ்.எல்.வி. மூலம் நாளை ஏவப்படுகிறது

சனி, 5 செப்டம்பர், 2009
இந்திய கிராமங்களை இணைக்க செயற்கைகோள்-இஸ்ரோ

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009
சந்திரயானுடன் தொடர்பு இழந்துவிட்டோம்: இஸ்ரோ
நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளையும் தாம் இழந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் கலத்தில் இருந்து வந்துகொண்டிருந்த சமிஞ்சைகள் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் முழுமையாக நின்றுவிட்டதாகவும், தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த செய்யப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
கலன் செயல் இழந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்படுவதாக இந்த திட்டத்தின் இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியன்று சென்னைக்கு வடக்கேயுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் கடந்த நவம்பர் மாதத்திலும் பின்னர் இவ்வருடம் ஜூன் மாதத்திலும் பல சிக்கல்களை சந்தித்திருந்தது.
சந்திரயான் பயணத்தின் அறிவியல் நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாகவும், தாங்கள் பெற எண்ணிய தரவுகளில்ள் 95 சதவீதம் வரையிலானவை கிடைத்துவிட்டதாகவும் திட்ட இயக்குனர் அண்ணாதுரை கூறினார்
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009
கூகுள் எர்த்க்கு (Google Earth) போட்டியாக இஸ்ரோ வின் புதிய இணையதளம்
