வங்கிகள் பெரும் - பெரும் தொழில் நிருவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றன. பங்க சந்தை, பத்திரங்கள், உட்பட பணம் பண்ணும் வழிகளை வங்கிகள் தெளிவாகவே கண்டு வைத்துள்ளன. வாடிக்கையாளர்களின் பணம் பல நிலைகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அவற்றிலிருந்து வரும் லாபங்கள் கடனுக்கான வட்டியுடன் கலந்தே வாடிக்கையாளர்களை அடைகின்றன. ஆனால் வட்டி சம்பந்தமான எத்தகையதொழிலிலும் பணம் முடக்காமல் வட்டி இல்லாத தொழில்களில் பணத்தை முடக்கி இந்த வங்கி செயல்படும். வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பிச்செல்வோர் சிறு தொழில் தொடங்குவதற்கு வட்டி இன்றி லோன் அளிக்கவும் வங்கி ஏற்பாடு செய்ய உள்ளது. இதில் பங்குதாரகளுக்கு லாபம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் 12-ம் தியதி கோழிகோட்டில் கேரளா அரசு தலைமையில் நடை பெறும் கூட்டத்தில் இஸ்லாமிய வங்கி திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கப்படவிருக்கிறது . P. முஹம்மத் அலி - Oman’s Galfar Group, C.K. மேனன்-Doha-based Behzad Group, M.A. யூஸுப் அலி -LuLu supermarket மற்றும் ஆசாத் மூப்பன் -Moopen’s Group ஆகியோர் முக்கிய ப்ரொமோட்டர் களாக செயல்படுவர்.
0 comments:
கருத்துரையிடுக