செவ்வாய், 8 செப்டம்பர், 2009

ஈரான் : பெண் துணை அதிபரை நியமிக்க அகமதுனிஜாத் திட்டம்

தமது நிர்வாகத்தில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் விதமாக ஈரான் துணை அதிபராக பெண் ஒருவரை நியமிக்க உள்ளதாக ஈரான் அதிபர் அகமதுனிஜாத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அகமதுனிஜாத் தமது அமைச்சரவையில் 3 பெண்களை நியமிக்க முடிவு செய்து அவர்களது பெயர்களை பரிந்துரை செய்திருந்தார்.ஆனால் அவர்களில் மர்ஜியா என்ற ஒரே ஒரு பெண்ணை மட்டும் சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில் துணை அதிபராக பாத்திமா அலியா என்ற பெண்ணை நியமிக்க இருப்பதாக அகமதுனிஜாத் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக