செவ்வாய், 8 செப்டம்பர், 2009

ஆப்கான் அதிபர் தேர்தல் : 2 லட்சம் மோசடி ஓட்டு

ஆப்கான் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளில் சுமார் 2 லட்சம் வாக்குகள் மோசடியானவை என கண்டறியப்பட்டு, வாக்கு எண்ணிக்கையிலிருந்து அவற்றை நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் அதிபர் தேர்தல் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதியன்று நடைபெற்றது.வாக்குப் பதிவின்போது பல்வேறு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாற்று எழுந்தது.சுமார் 650 க்கும் அதிகமான தேர்தல் முறைகேடு புகார்கள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது மொத்தம் பதிவான வாக்குகளில் சுமார் 2 லட்சம் வாக்குகள் மோசடியானவை என கண்டறியப்பட்டு, வாக்கு எண்ணிக்கையிலிருந்து அவற்றை நீக்கியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி வாக்குகள் 447 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் என்றும்,இந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு சீட்டுக்களைவிட பதிவான வாக்குச் சீட்டுக்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக