செவ்வாய், 8 செப்டம்பர், 2009
சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 35 பேர் பலி
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹீனன் மாகாணத்தில் செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 35 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஹீனன் மாகாணத்தின் பிங்கிங்ஷான் நகரில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் இன்று அதிகாலை வெடி விபத்து ஏற்பட்ட போது 93 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் 14 பேர் தப்பித்து விட்டதாகவும், 44க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக